ஜெர்மனில் தேர்தல் நடைபெறும் காலத்தில் இத்தாலியிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென இத்தாலியின் முன்னாள் பிரதமர் மற்றியோ றென்ஸி ( Matteo Renzi )தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ம் திகதி ஜெர்மனியில் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவின் நலனைக் கருத்திற் கொண்டு தாம் இந்த கோரிக்கையை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2018ம் ஆண்டிலேயே இத்தாலியில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலம் எனினும் அதற்கு முன்னதாகவே இத்தாலியில் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் அங்கீகாரம் வழங்க மறுத்த காரணத்தினால் கடந்த டிசம்பர் மாதம் மற்றியோ றென்ஸி பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment