Home இலங்கைஅனர்த்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சர் இரங்கல்

அனர்த்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சர் இரங்கல்

by admin


சீரற்ற காலநிலை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு சீன வெளிவிவகார  அமைச்சர் வாங் ஜி ( Wang Yi )இரங்கல் வெளியிட்டுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அவர் இந்த இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு அளவில் உதவிகளை வழங்க சீனா ஆயத்தமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் சீன அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் மரபு ரீதியாகவே நட்பு நாடுகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More