இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் 2017 ம் ஆண்டுக்கான தனியாள் சதுரங்கப் போட்டிகளின் மாவட்ட மட்டப் போட்டிகள் கல்வி அமைச்சின் அனுமதியுடன் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் இப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
வருடாந்தம் நாடளாவிய ரீதியாக நடைபெறும் இப்போட்டிகள் கடந்த வருடம் முதல்முறையாக கிளிநொச்சியில் நடத்தப்பட்டதுடன் 59 மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூன் 3ம் 4ம் திகதிகளில் மு.ப 8.30 மணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் 7 வயதின் கீழ், 9 வயதின் கீழ், 11 வயதின் கீழ், 13 வயதின் கீழ், 15 வயதின் கீழ், 17 வயதின் கீழ், 20 வயதின் கீழ், என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் என தனித்தனிப் பிரிவுகளாக நடைபெறவுள்ளன. வயதுகள் 2017-01-01ல் உள்ளவாறாக கணிப்பிடப்படும்.
15, 17 ,20 வயதுப் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களும், குறித்த பிரிவுகளில் போட்டிகளில் பங்குபற்றும் 6 மாணவர்களுக்கு ஒருவர் வீதமும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியும்.
7, 9, 11, 13 வயதுப்பிரிவுகளில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெறுபவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியும். இவ்விபரங்கள் போட்டி முடிவில் அறிவிக்கப்படும். போட்டிகளில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தேசியமட்ட போட்டிகள் ஜூன் 10ம்,11ம் திகதிகளில் நடைபெறும்.
மாவட்ட மட்டத்திலான இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள் இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதுடன் , பங்குபற்றும் மாணவர்களது பெயர் விபரம் அடங்கிய விண்ணப்பங்களை பொறுப்பாசிரியர் எதிர்வரும் 2ம் திகதி பி.ப 1.30 மணிக்கு கரைச்சிக் கோட்டக்கல்வி அலுவலகத்தில் உரிய கட்டணங்களைச் செலுத்தி நேரடியாக சமர்ப்பித்தல் வேண்டும் எனவும், வருகை தரும் போது குறித்த மாணவர்களது வயதினை உறுதிப்படுத்துவதற்காக அவர்களது பிறப்புச் சான்றிதழ்களையும் , அடையாள அட்டைகளையும் கொண்டு வருதல் வேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத் தலைவர் தி.சிவரூபன் அறிவித்துள்ளார்.
விண்ணப்பப்படிவங்கள் உரிய பாடசாலைகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதகவும் , இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0776991078 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத் தலைவர் தி.சிவரூபன் அறிவித்துள்ளார்.
விண்ணப்பப்படிவங்கள் உரிய பாடசாலைகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதகவும் , இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0776991078 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.