Home இலங்கைமலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது

மலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது

by admin


மலேசிய விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று அவுஸ்திரேலியாவின் மெல்பர்னிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த போது, குறித்த இலங்கையர் குண்டுப் புரளியை ஏற்படுத்தி சக பயணிகளை அச்சமடையச் செய்துள்ளார்.

தம்மிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் கூறி குறித்த இலங்கைப்பயணி  விமானியின் அறையை நோக்கிப் பிரவேசிக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினை காரணமாக விமானம் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கே திரும்பிச் சென்றுள்ளதாகவும் குறித்த இலங்கையரிடமிருந்த பொருள் வெடி குண்டு அல்ல எனவும் அது ஓர் செல்லிடப்பேசிகளை மின் ஏற்றும் பவர்பாங்க் எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சக பயணிகள் குறித்த நபரை மடக்கிப் பிடிக்க உதவியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More