180
ஐக்கிய நாடுகள பொதுச்சபை தலைவராக ஸ்லோவேக்கியாவின் வெளிவிவகார அமைச்சர் மிரோஸ்லாவ் லாஜ்காக் (miroslav lajčák) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த சபையின் தலைவராக கடமையாற்றிய பிஜி தீவுகளைச் சேர்ந்த பீட்டர் தொம்சனின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை ஐ.நா பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் (( Antonio Guterres) ) வெளியிட்டுள்ளார். நேற்று கூடிய பொதுச்சபையில் மிரோஸ்லாவ் லாஜ்காக் உள்ளிட்ட 16 துணை தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love