Home இலங்கைஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு

by admin


நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 203 என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளதுடன், மேலும் 95 பேரைக் காணவில்லை என குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு கிடையாது எனவும் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் அரச முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற போதும் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கக்கூடிய சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் 20 நிமிடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாகவும் பல மணித்தியாலங்கள் உதவிக்காக காத்திருக்க நேரிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More