Home இந்தியாகருணைமனு உரிமையை நிறைவேற்றும்வரை குல்பூஷண் ஜாதவ் தூக்கிலிடப்பட மாட்டார்:-

கருணைமனு உரிமையை நிறைவேற்றும்வரை குல்பூஷண் ஜாதவ் தூக்கிலிடப்பட மாட்டார்:-

by admin

கருணைமனு உரிமையை நிறைவேற்றும்வரை குல்பூஷண் ஜாதவ்வை தூக்கில் போட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கருணை மனு உரிமையை இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் நிறைவேற்றிக்கொள்ளும் வரையில், அவரைத் தூக்கில் போட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு , மரண தண்டனை விதித்து, பாகிஸ்தான் நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு எதிராக இந்தியா, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதனைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்றம் ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில், தான் இறுதி முடிவு எடுக்கும் வரையில், ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த தற்காலிக உத்தரவைத் தொடர்ந்து, இந்திய ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் இருப்பினும், முதலில் ராணுவ தளபதியிடமும், அடுத்து ஜனாதிபதியிடமும் கருணை கோரும் மனு உரிமையை தீர்த்துக்கொள்ளும் வரையில், குல்பூஷண்ஜாதவை தூக்கில் போட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More