விமர்சனம் செய்யும் உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆதரபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அவர் அவ்வாறான விமர்சனம் செய்யும் உரிமையை தாம் முழு அளவில் பாதுகாக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகங்கள் எப்போதும் எதிர்க்கருத்துக்களை மட்டுமே வெளியிடுவதாகவும், உண்மைகளை உதாசீனம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத் தகவல் திணைக்களம் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் கட்சி அரசியலுக்கு இடமளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் ஜனநாயகம் உரிமையாகாது எனவும் அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் ஜனநாயகம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.