Home இலங்கைஅரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது

by editorenglish

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பாடசாலைகளில் நடைபெற்ற விழாக்களில் கலந்துகொண்டனர்.

அதன் அடிப்படையில், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதற்குத் தடை உள்ளதா என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இல்லையென்றால், அரசாங்க உறுப்பினர்கள் மட்டும்தான் இவ்வாறு செயல்பட முடியுமா எனவும் வினவினர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More