பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா பிணை முறி மோசடி குறித்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகவுள்ளார். பிணை முறி மோசடி குறித்த விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக அவர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு எதிரில் முன்னிலையாவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஏற்கனவே ஹர்ஸ டி சில்வாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ஸ டி சில்வாவிற்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியின் மேலதிக பணிப்பாளர் வசந்த அல்விஸ் ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார்.
ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்ட காரணத்தினால் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் இரண்டு வாரங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.