கட்டார் வாழ் இலங்கையர்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. சவூதி அரேபியா ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட அரேபிய நாடுகள் சில கட்டாருடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளதுடன் எல்லைகளையும் மூடியுள்ளன.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கட்டார் உதவுவதாகக் குற்றம் சுமத்தி இவ்வாறு தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கட்டாரில் சுமார் 1லட்சத்து 25ஆயிரம் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கட்டாரில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை உள்ளகப் பிரச்சினை எனவும், அதனால் இலங்கையர்களுக்கு சிக்கல் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்