பிரித்தானியாவில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இன்றைய தினம் பிரித்தானிய பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பாக உள்ளது.
சுமார் 40 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடத்தப்பட உள்ளது. 46.9 மில்லியன் பேர் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், மொத்தமாக 650 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 46.4 ஆக காணப்பட்டது.
தபால் மூலம் வாக்களிப்போர் ஏற்கனவே வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலைகள், சமூக நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்பட உள்ளன. பிரதமர் திரேசா மே முன்கூட்டியே தேர்தலை நடத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதி, வடஅயர்லாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் போன்ற பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.