Home இலங்கைகாங்கேசன்துறை சீமெந்து ஆலை மோசடி குறித்து கோதபாயவிடம் விசாரணை

காங்கேசன்துறை சீமெந்து ஆலை மோசடி குறித்து கோதபாயவிடம் விசாரணை

by admin


காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற பல கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணைகளை நடத்த உள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட சில முன்னாள் உயர் படையதிகாரிகளிடம் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்கவிடம் நேற்றைய தினம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இந்த விசாரணைகளின் போது சாட்சியமளித்த தயா ரட்நாயக்க, தமது உத்தரவினை மீறி இயந்திர சாதனங்கள் வெட்டப்பட்டு பழைய இரும்பிற்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More