இலங்கை

7லட்சத்து 26ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன – நீதி அமைச்சு


7லட்சத்து 26ஆயிரம் வழக்குகள் விசாரணைகள் பூர்த்தியாகாது நிலுவையில் இருப்பதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரையிலான காலப்பகுதியில் குறித்த அளவு   வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 3 ,556 வழக்குகள் உச்ச நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும், 4,837 வழக்குகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்குகளில் 6லட்சத்து 99 ஆயிரத்து 784 வழக்குகள் கடந்த ஆண்டுகளின் வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply