வெளிநாட்டுப் பிரஜைகள் 5லட்சம் டொலர்களுடன் இலங்கையில் கணக்கு அரம்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் கணக்கு ஆரம்பிப்பதற்கான சட்டங்களில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விசேட வைப்புக் கணக்குகள் என்ற பெயரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளது. அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாக ஸ்ரெலிங் பவுண்ட்கள், சுவிஸ் பிராங்குகள், அவுஸ்திரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், கனேடிய டொலர்கள், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்றனவும் இவ்வாறு வைப்புச் செய்ய முடியும் என்ற வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
இதற்கு மேலதிகமாக துறைசார் அமைச்சர் வேறும் நாடுகளின் நாணப் பெறறுமதிகளை வைப்புச் செய்ய அனுமதிக்க முடியும் என்ற வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.