உலகம்

ஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறத் தடை


பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக ஹோமகம நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

ஞானசார தேரரை கைது செய்வதற்காக நான்கு காவல்துறை குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ள நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply