அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்பாக டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்தார். இதையடுத்து இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்திருந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் மன்னார்குடியில் தினகரன் ஆதரவாளர்கள் நேற்று மாரைல பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அங்கு சென்ற மன்னார்குடி து காவல்துறையினர் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி இல்லை என கூறி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்துள்ளனர்.