Home இந்தியாகொச்சி கடல் பகுதியில் படகு மீது சரக்கு கப்பல் மோதியதில், 3 மீனவர்கள் பலி 11 பேர் படுகாயம்:-

கொச்சி கடல் பகுதியில் படகு மீது சரக்கு கப்பல் மோதியதில், 3 மீனவர்கள் பலி 11 பேர் படுகாயம்:-

by admin

கொச்சி கடல் பகுதியில் அதிகாலை வேளையில்இ படகு மீது சரக்கு கப்பல் மோதியதில், 3 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்றையதினம் அதிகாலை வேளை மீன்பிடிப்பதற்காக படகில் 14 பேர் அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த போது அந்தப் பக்கம் சென்ற சரக்கு கப்பல் ஒன்று, படகு மீது மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை; மீனவர்கள் மீன் பிடிக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது எனவும் கப்பல் ஏன் வழிமாறி சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் இதுகுறித்து; தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More