Home இலங்கைஎன் மீதான குற்றசாட்டு கூட்டு பொறுப்புடையது -கல்வி அமைச்சர் – என் மீதான 10 குற்றசாட்டையும் அடியோடு மறுக்கிறேன். – விவசாய அமைச்சர்.

என் மீதான குற்றசாட்டு கூட்டு பொறுப்புடையது -கல்வி அமைச்சர் – என் மீதான 10 குற்றசாட்டையும் அடியோடு மறுக்கிறேன். – விவசாய அமைச்சர்.

by admin


வடமாகாண அமைச்சர்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பான கருத்து பகிரும் அமர்வு கைதடியில் உள்ள பேரவைக்கட்டத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

அதன் போது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தன்னுடைய தன்னிலை விளக்கத்தினை எழுத்து மூலம் முதலைமச்சரிடம் கையளித்துள்ளேன். அதனை சபையில் தெரிவிக்கவில்லை.

அத்துடன் என் மீதான குற்றசாட்டுக்கள் கூட்டு பொறுப்புடைய குற்றசாட்டுக்கள் அந்த குற்றசாட்டுக்கள் அமைச்சரவை தீர்மானம் தொடர்பானவை என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன் மீதான 10 குற்றசாட்டுக்களையும் அடியோடு மறுத்து தன்னிலை விளக்கமளித்தார்.

அதேவேளை இந்த அமைச்சு பதவி எனக்கு முதலமைச்சர் தந்தது. அவரது முடிவினை சிரம் தாழ்த்தி ஏற்க தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More