சவூதி அரேபியாவில் உரிய வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் 25ம் திகதி வரையில் நாடு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21ம் திகதி முதல் இந்த மாதம் 25ம் திகதி வரையில் வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குறித்த பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி இதுவரையில் சுமார் 3500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். வீசா இன்றி தங்கியிருக்கும் ஏனைய இலங்கையர்களும் இந்த பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்ப வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்புக் காலத்தின் பின்னர் வீசா இன்றி தங்கியிருப்போது கைது செய்யப்பட்டால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க நேரிடும் என சவூதி அரசாங்கம் எச்சரித்துள்ளது.