முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் கோரியுள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத அடிப்படையில் தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான அழுத்தங்களை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோர வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான அழுத்தங்களை நிறுத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஓர் காலக்கெடு விதிக்க வேண்டுமெனவும் இந்தக் காலக் கெடுவிற்குள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென அவர் வலியுறுத்தியள்ளார்.