Home இந்தியாஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த இந்திய இளைஞரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவிப்பு

ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த இந்திய இளைஞரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவிப்பு

by admin

இந்தியாவில் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த கர்நாடக இளைஞரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தினைச் சேர்ந்த   30 வயதான  முகமது ஷபி அர்மர் என்பவர்  இந்தியாவில் ஐ.எஸ்.இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி  உட்பட பர இடங்களில்  பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக இவர் உள்பட 6 பேர் மீது இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் முகமது ஷபி அர்மர், தன் சகோதரருடன் பாகிஸ்தானுக்கு சென்று தலைமறைவாக வாழ்ந்து  வருகிறார். இந்நிலையில், தனது சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அர்மரின் பெயரை அமெரிக்கா சேர்த்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More