Home இலங்கைமுன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு மரண தண்டனை

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு மரண தண்டனை

by admin


முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகல் உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளது.

மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் திகதி தனமல்வில பிரதேசத்தின் ஊவ குடாஓய அலிமங்கட பிரதேசத்தில் உப காவல்துறை பரிசோதகர் மற்றும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அவர்களது ஆயுதங்களை களவாடியமை ஆகியனவே இந்த முன்னாள் புலிப் போராளிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More