பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரின் செயற்பாடுகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரருமே பொறுப்பு சொல்ல வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு விடயங்களில் ஞானசார தேரர் தலையீடு செய்வதற்கு சம்பிக்க ரணவக்கவும், அதுரலிய ரதன தேரருமே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பிக்க மற்றும் அதுரலிய ரதன தேரர் ஆகியோரின் ஒப்பந்தங்களுக்கு அமையவே ஞானசார தேரர் வன்முறையாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு ஞானசார தேரரை இனக்குரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு இருவரும் தூண்டியதாகத் தெரிவித்துள்ளார்.