கடந்த பதினோராம் திகதி அதிகாலை தர்மபுரம் கல்லாறு பகுதியில் அறுபது பவுன் நகை மற்றும் நான்கு லட்சம் பணக் கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை தர்மபுரம் பொலிசார் கைது செய்திருந்தனர்
பொலிசார் நடத்திய மேலதிக விசாரணைகளின் பொழுது மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் ஒருதொகை நகைகள் ,ஒருதொகை பணம் என்பனவுடன் மூன்று வாள் மற்றும் கொள்ளை அடித்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று மோட்டார் சைக்கில் என்பன பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட நகைகளில், தர்மபுரம் கல்லாறு பகுதியில் களவாடப்பட்ட நகைகளில் சிலவும், இம்மாதம் கிளிநொச்சி கனகாம்பிகைக் குளப்பகுதியில் இடம்பெற்ற திருட்டில் களவாடப்பட்ட சில நகைகளும் இருப்பதாக உரிமையாளர்களால் பொலிஸ் நிலையத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
குறித்த சந்தேக நபர் ஐந்து பேரும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது சந்தேகநபர்களை பதின்நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது
அத்துடன் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு நபர்கள் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரகளை தேடும் பணியில் கிளிநொச்சி முல்லைத் தீவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ,சிரேட்ச பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகளின் ஆலோசனையின் பெயரில் தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி டி.எம். சத்துரங்க மற்றும் இராமநாதபுரம் பிரிவுப் பொறுப்பதிகாரி ரி.சுபேசன் ஆகியோரின் தலைமையிலான குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன
மேலும் கடந்த வருடம் கிளிநொச்சியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் இக் குழு சம்பந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின்பேரில் மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்மை குறிப்பிடத்தக்கது.