குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லண்டனில் மீளவும் வாகனமொன்றைக் கொண்டு பாதசாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு லண்டன் இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவரை லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பள்ளிவாசல் பக்தர்களை இலக்கு வைத்து வேண்டுமென்றே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் மிலேச்சத்தனமானது என பிரித்தானிய பிரதமர் திரேசா மே தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்காக இறைவனை பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார். புனித ரமழான் தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பியவர்களை இலக்கு வைத்து வாகனம் வேண்டுமென்றே மோதியுள்ளது.
Spread the love
Add Comment