குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இன்றையதினம் நீதமன்றம் தீர்மானித்துள்ளது.
தனது கணவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மேன்முறையீட்டினை தாக்கல் செய்திருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றத்தின் ஜூரி சபை முன்னிலையில், வழக்கு விசாரிக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமையை ஆராய்ந்த நீதிமன்றம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.
அத்துடன் சந்தேகநபர்களான கடற்படை அதிகாரிகள் மூவருக்கும் அழைப்பாணை விடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.