இலங்கை

நாட்டின் ஐக்கியத்தை பேணும் வகையில் புதிய சரத்து உள்ளடக்கப்பட வேண்டும் – சுதந்திரக் கட்சி


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

புதிய அரசியல் சாசனத்தில் நாட்டின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தி பேணும் வகையிலான புதிய சரத்து ஒன்று உள்ளடக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரியுள்ளது.

இதனைத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க  நாட்டின் ஐக்கியத்திற்கோ ஒருமைப்பாட்டுக்கோ குந்தகம் ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு விடயமும் புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படக் கூடாது என கோரியுள்ளார்.
1978ம் ஆண்டு அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மதத்திற்கான முன்னுரிமை, மதச் சுதந்திரம் குறித்த சரத்துக்களில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஐக்கியம், பௌதீக ஒருமைப்பாடு மற்றும் இறைமை போன்ற விடயங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு சரத்திற்கும் சுதந்திரக் கட்சியின் அனுமதி இருக்காது என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply