189
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனாவின் வாக்குறுதிக்கமைய வழங்கிய நிதியுதவியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹம்துல்லாவினால் உரிய காசோலை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமது நாட்டில் அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அயலிலுள்ள நட்பு நாடுகளுக்கு பங்களாதேஷ் வழங்கும் உதவிகளை பாராட்டிய ஜனாதிபதி அது இருதரப்பு உறவுகளின் சிறப்பான பண்பாகுமென தெரிவித்தார்.
Spread the love