175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெல்ஜியத்தின் பிரசில்ஸ் தொடருந்து நிலையத்தில் சிறு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வெடிபொருள் பெட்டியை அணிந்து சென்ற நபரை காவற்துறையினர் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே வேளை பட்டியை (பெல்ட்) அணிந்து சென்றவர் சுடப்பட்டார் என சில ஜரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
சம்பவத்தை தொடர்ந்து பிரசில்ஸ் தொடருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், அந்தப் பகுதியை பூரண கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.
Spread the love