லாலு பிரசாத்தின் மகளிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு பினாமி சொத்துகளை குவித்துள்ளதாக பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது புகார் எழுந்துள்ளதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர், அவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் சோதனைகளை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அத்துடன் லாலு பிரசாத்தின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான மிசா பாரதியை விசாரணைக்கு நேரில் முன்னலையாகுமாறு அழைப்பு விடுத்தும் அவர் முன்னலையாகாத காரணத்தினால் அவருக் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றையதினம் அவர் டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார். அவரிடம் 4 மணி நேரத்துக் கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் அவரிடம் கேள்விகள் கேட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டதுடன் அவருடைய நிதி, முதலீடுகள், அசையா சொத்துகள் பற்றியும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கபடப்டுள்ளது.