Home இந்தியாபி.எஸ்.எல்.வி சி-38 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது:-

பி.எஸ்.எல்.வி சி-38 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது:-

by admin


பி.எஸ்.எல்.வி சி-38 செயற்கைக்கோள் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இன்று காலை 9.29 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி-38 செயற்கைக்கோள், 31 செயற்கை கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதற்கான நேரக்கணிப்பு நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பமாகி இருந்தது.

பூமியை கண்காணிப்பது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குறித்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2, என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மொத்தமுள்ள 30 செயற்கைகோள்களில் 29 செயற்கைகளோள் அமெரிக்கா உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் தயாரானவை. ஒன்று மட்டும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More