கட்டார் மீதான தடையை நீக்க அல்-ஜசீராவை மூடுவது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை வளைகுடா நாடுகள் முன்வைத்துள்ளன.
இம்மாதத்தின் ஆரம்பத்திலிருந்து கட்டார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கட்டாரிடம் தாம் எதிர்பார்ப்பவை பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளன.
13 விடயங்கள் உள்ளக்கப்பட்ட அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை உள்ளடங்குகின்றன.
கட்டாருக்கும், வளைகுடா நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிக்கும் நிலையில் குவைத் மூலம் இந்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கட்டார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டினை கட்டார் மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது