161
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
வடக்கு லண்டனில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் தாக்குதல் நடத்தியவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 47 வயதான டரன் ஒஸ்போன்( Darren Osborne) என்ற நபர் மீது இவ்வாறு பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள பாதையில் தொழுகை முடித்து திரும்பியவர்கள் மீது வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் நடத்தியிருந்தார். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஒன்பது பேர் காயமடைந்திருந்தனர். பயங்கரவாதம், கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்மீது இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Spread the love