163
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
2010ம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக இஸ்ரேல் அரசாங்கம், துருக்கியர்கள் சிலருக்கு நட்டஈடு வழங்கியுள்ளது. இஸ்ரேல் மேற்கொண்ட ப்ளோடிலா சுற்றி வளைப்புச் சம்பவத்தில் 10 துருக்கிப் பிரஜைகள் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 20 மில்லியன் டொலர்கள் நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.
துருக்கியின் நிதி அமைச்சர் Naci Agbal இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்காக இஸ்ரேல் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love