180
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
பல்கேரியா முதலாவது செய்மதியை விண்ணுக்கு ஏவியுள்ளது. பல்கேரியா சட் 1 (BulgariaSat-1 )என்ற செய்மதியே இவ்வாறு விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
ஐரோப்பா, வடஆபிரிக்கா போன்ற நாடுகளில் தொலைக்காட்சி சேவைகளை வழங்க இந்த செய்மதி பயன்படுத்தப்பட உள்ளது. நாசாவின் கென்னடி வானியல் ஆய்வு மையத்திலிருந்து இந்த செய்மதி ஏவப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களின் போது தரைவழியிலான தொடர்பாடல் கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்டால் அதன் போது தொடர்பாடலுக்கும் இந்த செய்மதியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love