Home இலங்கைமஹிந்தவின் பாகிஸ்தான் பயணத்தினை அரசாங்கம் தடுக்க முயற்சித்தது – ஜீ.எல்.பீரிஸ்

மஹிந்தவின் பாகிஸ்தான் பயணத்தினை அரசாங்கம் தடுக்க முயற்சித்தது – ஜீ.எல்.பீரிஸ்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாகிஸ்தான் பயணத்தினை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

நட்பு நாடு ஒன்றின் அழைப்பினை ஏற்று முன்னாள் அரச தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் பயணத்தினை இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் தடுக்க முயற்சி செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாகிஸ்தான் பயணம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு, இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானிடம் கோரியது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More