இலங்கை

வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

கண்டி, பல்லேக்கலயில் நிர்மாணிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால  சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிறுவனம்  வருடாந்தம் 1900 மில்லியன் மருந்து  வில்லைகளை உற்பத்தி செய்யும் பாரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் வரையறுக்கப்பட்ட Celogen Lanka  நிறுவன தலைவர் ஏ.நடராஜா உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் நிகழ்வில் பங்குபற்றினார்கள்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply