Home இலங்கைமாணவர்கள் ஆயுதம் ஏந்தக் கூடும் என்ற டொக்டர் நவின் டி சொய்சாவின் கருத்து தொடர்பில் விசாரணை

மாணவர்கள் ஆயுதம் ஏந்தக் கூடும் என்ற டொக்டர் நவின் டி சொய்சாவின் கருத்து தொடர்பில் விசாரணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாணவர்கள் ஆயுதம் ஏந்தக் கூடும் என்ற டொக்டர் நவின் டி சொய்சாவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மாணவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தக் கூடிய சாத்தியம் உண்டு என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் டொக்டர் நவின் டி சொய்சா அண்மையில்  ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தக் கருத்து தொடர்பில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். இந்தக் கருத்து குறித்து விசாரணை நடத்துமாறு நபர் ஒருவர் காவல்துறை தலைமையகத்திற்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபரின் ஆலோசனையுடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More