Home இந்தியாஇந்திய கேரளா கடலோர பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழையால் கடல் அரிப்பு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன:-

இந்திய கேரளா கடலோர பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழையால் கடல் அரிப்பு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன:-

by admin

இந்தியாவின் கேரளாவில் கடலோர பகுதிகளில் காற்றுடன் பெய்து வரும் கன மழை காரணமாக பேரலை ஏற்பட்டு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இதனால், தொடு புழையாற்றின் கரையோரம் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கோட்டயம் மாவட்டத்தில்; பாடசாலைவாகனம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் பயணம் செய்த 20 மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

இந்தநிலையில் கடலோர பகுதிகளில் காற்றுடன் பெய்து வரும் கன மழை காரணமாக பேரலை ஏற்பட்டு கடல் அரிப்பு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More