பனாமா கேட் ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கும் கூட்டு புலனாய்வுக்குழு அழைப்பாணை அனுப்பி உள்ளதுடன் விசாரணைக்காக எதிர்வரும் 5ம் திகதி முன்நிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள பனாமா கேட் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரீப்பும், அவரது மகன்களும் நேரில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கும் கூட்டு புலனாய்வுக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.