Home இலங்கைதேசிய நல்லிணக்கத்திற்கு சமூக ஊடக வலையமைப்புக்கள் இடையூறாக காணப்படுகின்றன – ஜனாதிபதி

தேசிய நல்லிணக்கத்திற்கு சமூக ஊடக வலையமைப்புக்கள் இடையூறாக காணப்படுகின்றன – ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேசிய நல்லிணக்கத்திற்கு சமூக ஊடக வலைமையப்புக்கள் இடையூறாக காணப்படுகின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 125ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலையமைப்புக்கள் தடையாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடும்போக்காளர்கள் சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் இந்த சூழ்நிலையை அனைத்து மக்களும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள, தமிழ் , முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More