Home இலங்கை தமிழ் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியமானது – இந்திய உயர்ஸ்தானிகர்

தமிழ் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியமானது – இந்திய உயர்ஸ்தானிகர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமை மிகவும் அவசியமானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக அவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் தமிழ் தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகள், பொருளாதார மற்றும் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போன்ற மிகவும் அவசியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறnனினும் தாம் நாட்டின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More