இலங்கை

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்வர் – ரீ.பி. ஏக்கநாயக்க


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் செப்டம்பர் மாதம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்வர் என காணி ராஜாங்க அமைச்சர் ரீ.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த பதினெட்டு பேரில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் செப்டம்பர் மாதத்துடன் இந்த ஒப்பந்த காலம் பூர்த்தியாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தற்போது வெளியேறிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply