இலங்கை

டொக்டர் நெவில் பெர்னாண்டோவிற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் முறைப்பாடு?


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோவிற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முறைப்பாடு செய்ய உள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை காவல்துறை மா அதிபரிடம் இந்தப் முறைப்பாட்டைச் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நெவில் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மருத்துவர்களுக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விடும் வகையில் டொக்டர் நெவில் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டு வருவதாகத் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply