133
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலியில் அமைதி காக்கும் படையினரை நிலைநிறுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. படையினரின் தரத்தை மேம்படுத்துவதற்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love