இலங்கை

புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நாட்டின் ஒருமைப்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் – துமிந்த திஸாநாயக்க


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய  அரசியல் சாசனத்தின் ஊடாக நாட்டின் ஒருமைப்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறைமைக்கும் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படக் கூடாது என துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தமது கட்சியானது நாட்டை பிளவுபடுத்தும், நாட்டை துண்டாடச் செய்யும், இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் எந்தவொரு தீர்வுத் திட்டத்திற்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1978ம் ஆண்டிலிருந்து பௌத்த மத வழிபாடுகளுக்கு வழங்கப்பட்டு முன்னுரிமை எந்த வகையிலும் குறைக்கப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரப் பகிர்வின் போது ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டை விஞ்சிய தீர்வுத் திட்டங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply