குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மோசடியான முறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடியான முறையில் கஸ்டப் பிரதேசங்களில் விண்ணப்பம் செய்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்கலைக்கழக நுழைவினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மோசடியாக கஸ்டப் பிரதேசங்களின் ஊடாக சிலர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் வெளிமாவட்ட மாணவ மாணவியர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதியளிக்கும் அதிபர்களின் பணி இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மோசடியாக பரீட்சைக்குத் தோற்றும் மாணவ மாணவியரின் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஜே.எம்.என். புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.