குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை காவல்துறை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய, மாகாண மற்றும் நகர காவல்துறை என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியல் சாசனத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த யோசனைத் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒர் காவல்துறை நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காவல்துறை திணைக்களத்தை மூன்றாக பிரிப்பது பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் பணிகளுக்கு பாதக நிலையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த பரிந்துரைகளுக்கு அமைய வடக்கு மாகாணத்திலும் தனியான ஓர் மாகாண காவல்துறை பிரிவு உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு காவல்துறை திணைக்களத்தை துண்டுகளாக பிளவுபடுத்துவது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கொழும்பு சிங்கள வார இதழ் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
உத்தேச அரசியல் சாசனத்தில் இவ்வாறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரையில் இவ்வாறான எவ்வித விடயங்களையும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.