இலங்கை மலையகம்

மலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தீர்மானம் – வே. இராதாகிருஸ்ணன்


மலையகத்தில் 15 பாடசாலைகள் இந்திய உதவியுடன் அபிவிருத்தி செய்ய உள்ளது எனவும் அதற்கான அனுமதியை இந்தியா வழங்கி உள்ளதாக கண்டி உதவி இந்திய தூதரகம் தெரிவிக்கின்றது எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு 95 மில்லியன் நிதி உதவி வழங்குகின்ற எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற  கல்வி பொது சாதாணதர பரீட்சையில் தமிழ்மொழி மூலம் ஐந்து ‘ஏ’ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்ற 93 மாணவர்களையும் 100 சதவிதம் பாடரீதியில் பெறுபேறுகளை பெற காரணமாக இருந்த 165 ஆசிரியர்களையும் அதிபர்களையும் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தான் கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றவுடன்  மலையத்தில் 30 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்தியாவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கமைய முதற்கட்டமாக 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய உள்ளதாக கண்டி உதவி இந்திய  உயர்ஸ்தானிகர் செல்வி இராதா வெங்கட்ராமன் தன்னிடம் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply